செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

ரெயில் மீது ஏறி செல்பி எடுத்த மாணவர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2020-11-20 01:53 GMT   |   Update On 2020-11-20 01:53 GMT
நெல்லையில் ரெயில் மீது ஏறி செல்பி எடுத்த மாணவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:

நெல்லையை அடுத்த தாழையூத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இளநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மகன் ஜானேஸ்வர் (வயது 15). இவர் ஒரு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று காலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர், அங்குள்ள 4-வது பிளாட்பாரத்தில் நின்ற சரக்கு ரெயிலில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்குவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

திடீரென அவர் அந்த ரெயில் என்ஜினின் மீது ஏறி தனது செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றார்.

அப்போது ரெயில் என்ஜின் மீது செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் ஜானேஸ்வர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த தொழிலாளர்கள், ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் விரைந்து சென்று, இறந்த ஜானேசுவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ‘செல்பி’ மோகத்தால் மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News