செய்திகள்
தமிழக அரசு லோகோ

அருங்காட்சியகங்கள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Published On 2020-11-09 11:22 GMT   |   Update On 2020-11-09 11:22 GMT
தமிழகத்தில் அருங்காட்சியகங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அருங்காட்சியகங்கள் நாளை முதல் திறக்கப்பட்ட உள்ள நிலையில், அரசு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

அவை பின்வருமாறு: 

பார்வையாளர்கள் தங்கள் கைகளை சுத்தம் செய்த பிறகே அருங்காட்சியகத்துக்குள் அனுமதிக்க வேண்டும். 

ஆன்லைன் மூலம் மட்டுமே அருங்காட்சியகத்துக்கான டிக்கெட்டுகளை விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அருங்காட்சியக நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். 

அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்கள் எந்த பொருளையும் தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

அருங்காட்சியகத்தில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என குழு கண்காணிக்க வேண்டும். 

அருங்காட்சியகம் திறப்பு நேரத்தை 30 நிமிடம் அதிகரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.
Tags:    

Similar News