செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னையில் 4வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் பதிவான கொரோனா : மாவட்டம் வாரியாக முழு விவரம்....

Published On 2020-07-08 14:21 GMT   |   Update On 2020-07-08 14:26 GMT
தமிழகத்தில் இன்று 3 ஆயிரத்து 756 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 16 நாட்களில் உயர்ந்தது.

சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களில் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை) முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் சென்னையில் சற்று கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது.

இன்று தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.

ஆறுதல் அளிக்கும் விதமாக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,051 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 74,167 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,500 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 34,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 13,87,322 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக இன்று கொரோனாபாதிப்பு விவரம்:

அரியலூர் 12
செங்கல்பட்டு     273
சென்னை   1,261
கோயம்புத்தூர்   87
கடலூர்       71
தருமபுரி     32
திண்டுக்கல்         10
ஈரோடு        10
கள்ளக்குறிச்சி    13
காஞ்சிபுரம்           133
கன்னியாகுமரி  115
கரூர் 7
கிருஷ்ணகிரி      14
மதுரை        379
நாகப்பட்டினம்   19
நாமக்கல்  12
நீலகிரி        10
பெரம்பலூர்         3
புதுக்கோட்டை   31
ராமநாதபுரம்  65
ராணிப்பேட்டை 16
சேலம்   68
சிவகங்கை  34
தென்காசி  27
தஞ்சாவூர் 15
தேனி    75
திருப்பத்தூர் 10
திருவள்ளூர் 300
திருவண்ணாமலை  55
திருவாரூர்   38
தூத்துக்குடி  141
திருநெல்வேலி 6
திருப்பூர் 26
திருச்சி  21
வேலூர்  160
விழுப்புரம்   106
விருதுநகர்   70

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்     28
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்)     3
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்     0

மொத்தம்     3756 
Tags:    

Similar News