செய்திகள்
கரும்பு

கரும்பு சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம்- அதிகாரி தகவல்

Published On 2020-06-19 09:20 GMT   |   Update On 2020-06-19 09:20 GMT
கரும்பு சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளது என்று கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் மாலதி கூறியுள்ளார்.
மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1-யை சுற்றி நூற்றுக் கணக்கான கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்து அதனை பராமரித்து வருகின்றனர். வறட்சி காலங்களில் தண்ணீர் பற்றாக் குறையை சமாளிக்கும் வகையில் சொட்டுநீர் பாசனத்தை அதிகளவில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்றும் வேளாண் அதிகாரிகள் அவ்வப்போது விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வறட்சியை சமாளிக்கும் வகையில் கரும்பு சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது.

இவற்றை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதற்கான சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை அந்தந்த கரும்பு அலுவலர் மற்றும் கரும்பு உதவியாளர் உள்ளிட்டவர்களை அணுகி சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கான ஆலோசனைகளை பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News