search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொட்டுநீர் பாசனம்"

    • கெலமங்கலம் வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுக்கா கெலமங்கலம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ், பைரமங்கலம் கிராமத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.

    இதில் கெலமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநர் கலா தலைமை தாங்கி, விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதன் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார். வேளாண் உதவி பொறியாளர் அக்பர் சொட்டுநீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், மத்திய, மாநில அரசுகளின் வேளாண்துறை சார்ந்த மானிய திட்டம் மற்றும் பாரம்பரிய வேளாண்மை குறித்து விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் சுந்தர்ராஜ், கலைஞர் ஒருகிணைந்த வேளாண்மை திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், இடுபொருட்கள், உபகரணங்கள், பண்ணைக் கருவிகள் குறித்து விளக்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா, உழவன் செயலியின் அவசியம் குறித்து விளக்கினார்.

    மேலும், கிசான் கடன் அட்டை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

    • வெங்கடாம்பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது.
    • தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படும் இந்த திட்டத்தினை பற்றி ஊராட்சி மன்ற தலைவர் கேட்டறிந்தார்.

    கடையம்:

    கடையம் வட்டாரத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி கிராமத்தில் தென்காசி மாவட்டம் தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி அறிவுரைப்படி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றும் சிறப்பு திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021 -22-ம் நிதியாண்டில் புதியதாக உருவாக்கப்பட்டு 15 ஏக்கர் பரப்பு தரிசு நிலத் தொகுப்பில் அமைக்கப்பட்டு உள்ள சொட்டுநீர் பாசன அமைப்பு வயல்களை, வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஸாருகலா ரவி மற்றும் துணை தலைவர் சித்ரா பாபு ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.

    மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படும் இந்த திட்டத்தினை பற்றி ஊராட்சி மன்ற தலைவர் கேட்டறிந்தார். ஆய்வின்போது தரிசு நில தொகுப்பின் குழு தலைவர் அமிர்தராஜ் , வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து செயலாளர் பாரத், விவசாயி ரவி, பாபு பக்கியநாதன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் கடையம் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கோவிந்தராஜன், திருமலை குமார்ஆகியோர் ஆய்விற்கான ஏற்பாடுகளை செய்து உடனிருந்து விளக்கம் அளித்தனர்.

    • குறைந்த அளவு நீராதாரத்தைக் கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள சிறந்த தொழில் நுட்பமே நுண்ணீர் பாசன திட்டம்.
    • நடப்பு ஆண்டில் அனைத்து விவசாயிகளும் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு நுண்ணீர்ப்பாசனம் அமைத்து சாகுபடி அதிகரிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளே! குறைந்த அளவு நீராதாரத்தைக் கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள சிறந்த தொழில் நுட்பமே நுண்ணீர் பாசன திட்டம். நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது விண்ணப்பங்களை விவசாயிகளே கணிப்பொறி மூலம் தோட்டக்கலைத் துறையின் https://tnhorticulture.tn.gov.in:8080/Home/Index என்ற இணைய தளத்தில் பதிவு செய்து முன்னுரிமை பெறலாம். தோட்டக்கலைப்பயிர்களான பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்ப்பயிர்கள், வாசனைதிரவிய பயிர்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகளுக்கு (2 எக்டர் வரை விவசாய நிலமுள்ளவர்கள்)100 சதவீதம் மானியத்தில் எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1,35,855 வரையும், இதர விவசாயிகளுக்கு (2 எக்டருக்கு மேல் விவசாய நிலமுள்ளவர்கள்) 75 சதவீதம் மானியத்தில் எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1,05,530 வரையும் நுண்ணீர்ப்பாசனம் அமைக்கும் பயிரின் இடைவெளியை பொறுத்து மானியம் பெறலாம்.

    இத்திட்டத்திற்காக நடப்பு ஆண்டில் 2625 எக்டர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைத்திட ரூ.20.71 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தங்களது நிலஆவணங்களான சிட்டா இ அடங்கல் , 3 புகைப்படம், நில வரைபடம், கிணறு அல்லது போர்வெல் உள்ளதற்கான சான்று, குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டு முதலியவற்றை எடுத்து வந்து நேரிலும் முன்பதிவு செய்யலாம். தங்களது விருப்பத்தின் அடிப்படையில் அரசினால அங்கீகரிக்கப்பட்டுள்ள நுண்ணீர்ப்பாசன நிறுவனங்களை விவசாயிகள் தேர்வு செய்யலாம்.

    தேவைப்படின் விவசாயிகள் தாமாகவே பதிவு செய்யலாம் அல்லது நுண்ணீர்ப்பாசன நிறுவனம் மூலமாகவோ, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலமாக பதிவு செய்து பயன்பெறலாம்.மேலும் நுண்ணீர் பாசனம் தொடர்பான அனைத்து விபரங்களுக்கும் 1800 425 4444 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே நடப்பு ஆண்டில் அனைத்து விவசாயிகளும் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு நுண்ணீர்ப்பாசனம் அமைத்து சாகுபடி பரப்பினை அதிகரித்து அதிக வருவாயினை பெற்று பயனடையுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

    • பள்ளபாளையம் குளம் பாதுகாப்பு அமைப்பி ன் சார்பில் 10ஆயிரம் பனை விதைகளும், 5000 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட உள்ளது.
    • சாமளாபுரம் பொன்னுச்சாமி உள்பட பலர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மங்கலம்: 

    திருப்பூர் மாவட்டம், சாமளா புரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் உள்ள சின்னகுளத்தின் குளக்கரையில் சாமளாபுரம் மற்றும் பள்ளபாளையம் குளம் பாதுகாப்பு அமைப்பி ன் சார்பில் 10ஆயிரம் பனை விதைகளும், 5000 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட உள்ளது .இதன் முதற்கட்டமாக பள்ளபாளை யம் சின்னகு ளத்தின் குளக்கரையில் பனைவிதைகள், மரக்கன்றுகள் நடுவதற்காக குழிகள் தோண்டப்பட்டு சொட்டுநீர்பாசனம் அமைப்ப தற்கான பணிகள் நடைபெற்றது.இப்பணிகளை சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, சாமளாபுரம் மற்றும் பள்ளபாளையம் குளம் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி களான எஸ்.கே.எல்.மணி, என்.ராமசாமி, பள்ளபாளையம் கிருஷ்ணகுமார், திருப்பூர் மேற்கு ரோட்டரி முன்னாள் தலைவர் ரகுபதி, சாமளாபுரம் பொன்னுச்சாமி உள்பட பலர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சுங்ககாரன்பட்டி, வீரணம்பாளையம், பிராந்தகம், கூடச்சேரி ஆகிய வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • (8 விவசாயிகள்) விவசாயிகளுக்கு நிலத்தடி போர் அமைத்து மின்சாரம் வழங்கி சொட்டுநீர் பாசனமும் அமைத்து தரப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் நடப்பு நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சுங்ககாரன்பட்டி, வீரணம்பாளையம், பிராந்தகம், கூடச்சேரி ஆகிய வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இக்கிராமங்களில் 10 ஏக்க ருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்கள் உள்ள (8 விவசாயிகள்) விவசாயிகளுக்கு நிலத்தடி போர் அமைத்து மின்சாரம் வழங்கி சொட்டுநீர் பாசனமும் அமைத்து தரப்படுகிறது. தகுதியுடைய விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவ லர்கள் மற்றும் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    • சிறு, குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
    • 75 சதவீதம் வரை மனித உழைப்பு சேமிக்கப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டாரத்தில், மானிய திட்டத்தின் கீழ் 255 ஹெக்டருக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

    பிரதமரின் நுண்ணீர்பாசனத்திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு நீர் சிக்கனம், களைகள் கட்டுப்படுத்துதல் மற்றும் அதிக விளைச்சலுக்கு சொட்டுநீர் பாசனம் சிறந்த முறையாகும்.நீண்ட கால வயதுடைய பயிர்களுக்கும், காய்கறி பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். சொட்டுநீர் பாசனம் வாயிலாக, திரவ உரங்கள் மற்றும் நீரில் கரையக்கூடிய உரங்களை, வெஞ்சுரி மற்றும் நீரேற்றம் கருவிகளின் உதவியுடன் பாசன நீரில் கலந்து உரங்களை பயிரின் வேர்பாகத்தில் நேரடியாக கொடுக்கலாம். பயிரின் தேவைகேற்ப உரத்தை பலமுறை பிரித்து இடவும் சாத்தியமாகிறது. பாசன நீரும் உரமும் தொடர்ந்து வேர்ப்பகுதியில் பயிருக்கு கிடைப்பதால், நடவு முதல் அறுவடை வரை, பயிர் வளர்ச்சி நன்கு அமைந்து, விளைச்சல் அதிகரிக்கிறது.

    மணற்பாங்கான பூமி மழை குறைவான பகுதிகள், சரிவான பகுதி மற்றும் பாசன முறைகளில் பயிர் சாகுபடி மேற்கொள்ள இயலாத பகுதி போன்ற நிலங்களுக்கு சொட்டு நீர் பாசனம் சிறந்த முறையாகும்.பயிர் சாகுபடி பரப்பில் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே ஈரமாக்கபடுவதால் களை வளர்ச்சி பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.மேலும் 75 சதவீதம் வரை மனித உழைப்பு சேமிக்கப்படுகிறது. பூச்சி, பூஞ்சாணங்களின் தாக்குதல் மிகவும் குறைகிறது.

    சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 855 ரூபாய் வரையும், மற்ற விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 530 ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.மேலும் துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் தோட்டகலைத்துறை வாயிலாக டீசல் பம்ப்செட், மின் மோட்டார் பம்ப் செட் நிறுவ 50 சதவீதம் மானியம், ரூ.15 ஆயிரமும், வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம், 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.அதோடு, பாதுகாப்பு வேலியுடன் தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க 50 சதவீதம் என ஒரு கன மீட்டருக்கு ரூ.350 வீதம், ஒரு பயனாளிக்கு ரூ. 40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

    தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மடத்துக்குளம் உள் வட்டத்தைச் சார்ந்த கிராமங்களுக்கு மட்டும் போர்வெல் அமைக்க, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு, ஆதார், வங்கி புத்தக நகல், புகைப்படம்- 2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மடத்துக்குளம் வட்டாரத்தில் காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, துங்காவி, தாந்தோணி, மைவாடி, கடத்தூர், கணியூர், மெட்ராத்தியை சேர்ந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன்- 96598 38787 என்ற எண்ணிலும்,கொமரலிங்கம், சங்கராமநல்லூர், வேடபட்டி, கொழுமம், சோழமாதேவி, அ.கண்ணாடிபுத்தூர், பாப்பான்குளம், ச. கண்ணாடிபுத்தூர் விவசாயிகள் உதவி தோட்டகலை அலுவலர் நித்யராஜ் - 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.மேலும் https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற இணையதளத்தில் விவசாயிகளே நேரடியாக விண்ணப்பித்தும், சொட்டு நீர் பாசன விபரங்கள் மற்றும் மானிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    • ஆடி மாத காற்று துவங்கியுள்ளதால் வாழை மரங்களை பாதுகாப்பதற்கான பணிகளையும் விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
    • வாழை சாகுபடியில் கன்று நடவு செய்ததும், தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் அதிக நீர்வளம் மிகுந்த பகுதிகளில் மட்டும் வாழை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இச்சாகுபடியில்வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நேரடி பாசன முறையில் அதிக தண்ணீர் தேவைப்படும்.

    இதனால் தோட்டக்கலைத்துறை வழிகாட்டுதல்படி, சொட்டு நீர் பாசனம் அமைத்து வாழை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது பரவலாக நேந்திரன் ரக வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.ஆடி மாத காற்று துவங்கியுள்ளதால் வாழை மரங்களை பாதுகாப்பதற்கான பணிகளையும் விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வாழை சாகுபடியில் கன்று நடவு செய்ததும், உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலும் வாரம் ஒரு முறை கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.தண்ணீர் பாய்ச்ச தொழிலாளர்கள் தேவையும் அதிகம் இருந்தது. ஆனால் சொட்டு நீர் பாசன முறையில், வாழைக்கன்றுகளுக்கு அருகிலேயே தண்ணீரை நேரடியாக பாய்ச்ச முடியும்.இதனால் 40 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

    சொட்டு நீர் பாசனத்தில் தினமும் 2 மணி நேரம் பாசனம் செய்தால் போதும். தொழிலாளர் தேவையும் இல்லை.உரங்களை தண்ணீரில் கரைத்தும் வாழை மரங்களுக்கு வழங்கலாம். போதிய இடைவெளி விட்டு, வாழைக்கன்றுகளை நடவு செய்வதால் களைகளை அகற்றுவதும் எளிதாக மாறியுள்ளது.சொட்டு நீர் பாசனத்துக்கு தோட்டக்கலைத்துறை வாயிலாக முழு மானியம் வழங்க வேண்டும். மேலும், திசு வாழை ரக கன்றுகளை தோட்டக்கலை பண்ணை வாயிலாக உற்பத்தி செய்து வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    ×