search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "borehole"

    • விபத்து களைத் தடுக்கும் வகையில் கண்டறிந்து உடனடி யாக மூடவும் உத்திரவிடப்பட்டுள்ளது.
    • நடவடிக்கை மேற்கொள்ளவும் உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பணிகளின் போது ஏற்படுத்தப்பட்டுள்ள பள்ளங்கள் மற்றம் குவாரி குழிகள் ஆகியவை மனிதர்கள், விலங்குகள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட ஆபத்துகளை ஏற்படுத்துவதுடன் சில உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு உடனடி யாக பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய, விரிவான கணக்கெடுப்பு நடத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் எளிதாக்க திறந்தவெளி கிணறுகள் மற்றும் செய லிழந்த ஆழ்துளை கிணறு களின் இருப்பிடங்கள், பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களின் விரிவான பதிவை ஏற்படுத்த அலுவலர்களுக்கு உத்திர விடப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேருராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாத்திய மான அபாயங்களைக் குறைக்க அனைத்து திறந்த வெளி கிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளைக் கிணறுகளையும், திறம்பட பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், இவற்றால் ஆபத்துகள் ஏற்படாத வகையில் ஒவ்வொரு திறந்த வெளி கிணறுக்கும் போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தல் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகள், குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய விபத்து களைத் தடுக்கும் வகையில் கண்டறிந்து உடனடி யாக மூடவும் உத்திர விடப்பட்டுள்ளது. மேலும், கைவிடப்பட்ட குவாரி குழிகளால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதை தடுக்கும் வகை யில் உடனடி நடவடிக்கை யாக பாதுகாப்பு வேலிகள் அமைக்க குவாரி குத்தகை தாரர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதேபோன்று சாலையைப் பயன்படுத்து பவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைகளில் கட்டுமானக் குழிகள் மற்றும் அகழிகளுக்கு வலுவான தடுப்புகளை அமைத்திடவும், அவை வாகன ஓட்டிகளுக்கு நன்றாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும், அபாய கரமான இடங்களின் அருகில் எச்சரிக்கை பலகைகள் வைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளவும் உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழக்கரையில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு உள்ளது.
    • ஆழ்துளை கிணற்றை மூட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    8-வதுவார்டு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும்பணி மும்முரமாக நடைபெற்றது. அந்த பணி தொடங்கப்பட்டு 8 மாதத்திற்கும் மேலாகி விட்டது. இதுவரையிலும் அந்த பகுதியில் பொதுமக்க ளுக்கு தண்ணீர் வினியோகம் செய் யப்படவில்லை.

    மேலும் ஆழ்துளை கிணற்றை சரிவர மூடாமல் அப்ப டியே விட்டு சென்று விட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அப்பகுதியில் குழந்தைகள் விளையாடி வருகின்றனர்.

    இதனால் அவர்கள் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளதால் ஆபத்தான ஆழ்துளை கிணற்றை மூடிட உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி கவுன்சிலர் முகமது காசிம் கூறுகையில், ஆழ்துளை கிணறு அமைத்த பின்பு அப்படியே பணியை நிறுத்தியதால் அங்குள்ள சிறுவர்கள் ஆழ்துளை கிணறுக்குள் பெரிய கற்களை போட்டதாக கூறப்படுகிறது.

    அதனால் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்க முடியவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளேன். எந்த நடவடிக்கையும் இல்லை. அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பு உடனடியாக பணியை முடிக்க வேண்டும் என்றார். ஆழ்துளை கிணற்றை மூட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    கீழக்கரை நகராட்சி சேர்மன் அலுவலகத்திற்கு வந்து சேர்மன், கவுன்சி லர்கள் நாள்தோறும் வார்டு களுக்கு சென்று மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டது.
    • மத்தியப் பிரதேச முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது.

    தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

    100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்தது. இரவு, பகல் பாராமல் மீட்பு பணி மேற்கொண்டனர். இந்நிலையில், சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டது.

    மீட்கப்பட்ட பெண் குழந்தை அங்கிருந்த ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆழ்துளை கிணற்றின் குழியில் விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மனம் அளவற்ற வேதனையும் துயரமும் நிறைந்துள்ளது. தொடர் மற்றும் அயராத முயற்சிகளுக்குப் பிறகும், சேஹூரில் உள்ள முங்காவாலியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த அப்பாவி சிறுமியை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.

    இந்த துக்க நேரத்தில் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருடன் நாம் அனைவரும் இருக்கிறோம்.

    சிறுமியின் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினருக்கு இந்த இழப்பை தாங்கும் ஆற்றலையும் இறைவன் தர பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சுங்ககாரன்பட்டி, வீரணம்பாளையம், பிராந்தகம், கூடச்சேரி ஆகிய வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • (8 விவசாயிகள்) விவசாயிகளுக்கு நிலத்தடி போர் அமைத்து மின்சாரம் வழங்கி சொட்டுநீர் பாசனமும் அமைத்து தரப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் நடப்பு நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சுங்ககாரன்பட்டி, வீரணம்பாளையம், பிராந்தகம், கூடச்சேரி ஆகிய வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இக்கிராமங்களில் 10 ஏக்க ருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்கள் உள்ள (8 விவசாயிகள்) விவசாயிகளுக்கு நிலத்தடி போர் அமைத்து மின்சாரம் வழங்கி சொட்டுநீர் பாசனமும் அமைத்து தரப்படுகிறது. தகுதியுடைய விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவ லர்கள் மற்றும் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    ×