search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு
    X

    கீழக்கரை 8-வது வார்டு பகுதியில் ஆழ்துளை கிணறு திறந்த நிலையில் காட்சியளிக்கிறது.

    திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு

    • கீழக்கரையில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு உள்ளது.
    • ஆழ்துளை கிணற்றை மூட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    8-வதுவார்டு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும்பணி மும்முரமாக நடைபெற்றது. அந்த பணி தொடங்கப்பட்டு 8 மாதத்திற்கும் மேலாகி விட்டது. இதுவரையிலும் அந்த பகுதியில் பொதுமக்க ளுக்கு தண்ணீர் வினியோகம் செய் யப்படவில்லை.

    மேலும் ஆழ்துளை கிணற்றை சரிவர மூடாமல் அப்ப டியே விட்டு சென்று விட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அப்பகுதியில் குழந்தைகள் விளையாடி வருகின்றனர்.

    இதனால் அவர்கள் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளதால் ஆபத்தான ஆழ்துளை கிணற்றை மூடிட உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி கவுன்சிலர் முகமது காசிம் கூறுகையில், ஆழ்துளை கிணறு அமைத்த பின்பு அப்படியே பணியை நிறுத்தியதால் அங்குள்ள சிறுவர்கள் ஆழ்துளை கிணறுக்குள் பெரிய கற்களை போட்டதாக கூறப்படுகிறது.

    அதனால் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்க முடியவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளேன். எந்த நடவடிக்கையும் இல்லை. அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பு உடனடியாக பணியை முடிக்க வேண்டும் என்றார். ஆழ்துளை கிணற்றை மூட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    கீழக்கரை நகராட்சி சேர்மன் அலுவலகத்திற்கு வந்து சேர்மன், கவுன்சி லர்கள் நாள்தோறும் வார்டு களுக்கு சென்று மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×