search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெங்கடாம்பட்டி ஊராட்சியில் சொட்டுநீர் பாசன வயல்களை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு
    X

    வெங்கடாம்பட்டி ஊராட்சியில் சொட்டுநீர் பாசன வயல்களை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு

    • வெங்கடாம்பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது.
    • தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படும் இந்த திட்டத்தினை பற்றி ஊராட்சி மன்ற தலைவர் கேட்டறிந்தார்.

    கடையம்:

    கடையம் வட்டாரத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி கிராமத்தில் தென்காசி மாவட்டம் தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி அறிவுரைப்படி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றும் சிறப்பு திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021 -22-ம் நிதியாண்டில் புதியதாக உருவாக்கப்பட்டு 15 ஏக்கர் பரப்பு தரிசு நிலத் தொகுப்பில் அமைக்கப்பட்டு உள்ள சொட்டுநீர் பாசன அமைப்பு வயல்களை, வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஸாருகலா ரவி மற்றும் துணை தலைவர் சித்ரா பாபு ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.

    மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படும் இந்த திட்டத்தினை பற்றி ஊராட்சி மன்ற தலைவர் கேட்டறிந்தார். ஆய்வின்போது தரிசு நில தொகுப்பின் குழு தலைவர் அமிர்தராஜ் , வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து செயலாளர் பாரத், விவசாயி ரவி, பாபு பக்கியநாதன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் கடையம் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கோவிந்தராஜன், திருமலை குமார்ஆகியோர் ஆய்விற்கான ஏற்பாடுகளை செய்து உடனிருந்து விளக்கம் அளித்தனர்.

    Next Story
    ×