செய்திகள்
கொரோனா வைரஸ்

டெல்லி சென்று திருவாரூர் திரும்பிய 43 பேர் கொரோனா வார்டில் அனுமதி

Published On 2020-04-02 07:54 GMT   |   Update On 2020-04-02 07:54 GMT
டெல்லி சென்று திருவாரூர் திரும்பிய 43 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்:

டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விவரம் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 30 பேர் என அடையாளம் காணப்பட்டது.

இவர்கள் 30 பேரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தனர். இதில் 18 பேர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 12 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல மியான்மரை சேர்ந்த 1 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு திருவாரூர் வந்துள்ளனர். அவர்களும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மியான்மரை சேர்ந்தவர்கள் உள்பட 31 பேரின் ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணியை சேர்ந்த ஒருவர், மியான்மரை சேர்ந்த ஒருவர் என 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News