செய்திகள்
கியாஸ் சிலிண்டர்

முன்பதிவு அதிகரிப்பால் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதில் தாமதம்

Published On 2020-03-30 11:42 GMT   |   Update On 2020-03-30 11:42 GMT
தமிழகம் முழுவதும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதில் தாமதம் எற்பட்டுள்ளது.

கோவை:

தமிழகம் முழுவதும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு அமலில் இருப்பதால் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடும் ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உடனுக்குடன் கியாஸ் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

இதனால் முன்பதிவு செய்தவர்களுக்கு வினியோகம் செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கிய இணைப்புகளுக்கு மட்டுமே 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதனை தவறாக புரிந்து கொண்டு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசம் என்று நினைத்து அவசரப்பட்டு பதிவு செய்கின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு ஏராளமான சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு நடந்து வருகிறது.

இதுகுறித்து கியாஸ் வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், கியாஸ் வினியோகம் அத்தியாவசியம் என்பதால் எந்த தடையும் ஏற்படவில்லை.

எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். கோவை உள்பட எந்த பகுதியிலும் சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது.

பொதுமக்கள் சிலிண்டர் கிடைக்காது என்ற அச்சத்தில் முன்பதிவு செய்து விடுகின்றன்.

இதனால் வினியோகம் செய்ய 5 நாட்கள் வரை ஆகிறது. கியாஸ் சிலிண்டரை வீடுகளுக்கு கொண்டு செல்லும் தொழிலாளர்கள் 80 சதவீதத்தினரே பணிக்கு வருகின்றனர். அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக முக கவசம், கையுறை, கைகழுவும் திரவம் உள்ளிட்டவை வழங்கியுள்ளோம். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News