செய்திகள்
கொரோனா வைரஸ்

கோவை மத்திய சிறையில் கைதிகளை பரிசோதனை செய்ய 2 சிறப்பு வார்டுகள்

Published On 2020-03-23 04:57 GMT   |   Update On 2020-03-23 04:57 GMT
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகள் மற்றும் சிறைக்கு புதிதாக வரும் கைதிகளை பரிசோதனை செய்ய 2 சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளது.

கோவை:

கோவை மத்திய சிறையில் 1,800 ஆண் கைதிகள், 75 பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பீதி காரணமாக மத்திய சிறையில் 2 சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகள் மற்றும் சிறைக்கு புதிதாக வரும் கைதிகளை பரிசோதனை செய்ய 2 சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளது.

இதில் ஒரு வார்டில் சிறைக்கு புதிதாக வரும் கைதிகளுக்கு காய்ச்சல், சளி பாதிப்புகள் உள்ளதா? என்று பரிசோனை செய்யப்பட்ட பின்னரே சிறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மற்றொரு வார்டில் சிறையில் உள்ள கைதிகளுக்கு காய்ச்சல், சளி பாதிப்புகள் உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்படுகிறார்கள். யாருக்காவது காய்ச்சல் நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News