செய்திகள்
கடத்தப்பட்ட வாலிபர்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் காரில் கடத்தல் - 5 பேர் கும்பலை பிடிக்க தீவிரம்

Published On 2020-01-28 10:16 GMT   |   Update On 2020-01-28 10:16 GMT
அம்பத்தூர் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவரை காரில் கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அம்பத்தூர்:

அம்பத்தூரை அடுத்த ஒரகடம் செல்வ விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் திலீப்குமார் (34).

வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களுக்கு புரோக்கராக செயல்பட்டு வந்தார். இவரது மனைவி சுதா.

இன்று காலை திலீப் குமாரின் வீட்டுக்கு 5 வாலிபர்கள் காரில் வந்தனர். அவர்கள் வெளிநாட்டு வேலை குறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென 5 பேரும் திலீப்குமாரை தாக்கி காருக்குள் ஏற்றினர்.

பின்னர் அவரை அங்கிருந்து கடத்தி சென்று விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திலீப் குமாரின் மனைவி சுதா அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.

உதவி கமி‌ஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரம், முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் திலீப்குமாரை கடத்த பயன்படுத்திய காரின் பதிவு எண் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

கடத்தப்பட்ட திலீப்குமார் பலரிடம் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறில் அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். வாலிபர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News