செய்திகள்
கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்டு கிராம மக்கள் போராட்டம் செய்த காட்சி.

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டுபோட்டு கிராம மக்கள் போராட்டம்

Published On 2020-01-27 16:24 GMT   |   Update On 2020-01-27 16:24 GMT
வாணியம்பாடி அருகே ஏற்கனவே அறிவித்த தீர்மானங்களை நிறைவேற்றாததால் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு கிராம மக்கள் பூட்டுபோட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி:

வாணியம்பாடி அருகே பேரணாம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட  கொல்லகுப்பம் ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட கிராமசபா கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் (நேற்று) நடக்க இருந்த கிராமசபா கூட்டத்தை நடத்தக்கூடாது  என்று கூறி, அங்கிருந்த ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் என்பவரை வெளியேற் றிவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம இளைஞர்கள் பூட்டு போட்டு அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி வட்டவழங்கல் அதிகாரி குமார், வருவாய் ஆய்வாளர் புகழேந்தி, பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா மற்றும் அதிகாரிகள்,  பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் தங்களின் புகாரை எழுத்து மூலமாக தந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்களும், இளைஞர்களும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News