செய்திகள்
* நடிகர் ரஜினிகாந்த் மீது புகார் கொடுக்க வந்த திராவிடர் விடுதலை கழகத்தினரை படத்தில் காணலாம்.

நடிகர் ரஜினிகாந்த் மீது போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

Published On 2020-01-17 10:06 GMT   |   Update On 2020-01-17 10:06 GMT
பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை:

சென்னையில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது முரசொலி பத்திரிகை குறித்தும், பெரியார் குறித்தும் பேசினார். இதற்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சுப.வீரபாண்டியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கோவை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மாநகர தலைவர் நேருதாஸ் தலைமையில் அக்கட்சியினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 14-ந் தேதி சென்னையில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971-ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை பேசியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலை பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியை பரப்பி, பொது அமைதியை குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ மற்றும் 505 ஆகிய 2 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News