செய்திகள்
புகழேந்தி

சசிகலா வெளியே வந்தால் ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள்- புகழேந்தி பேட்டி

Published On 2019-09-17 13:51 GMT   |   Update On 2019-09-17 13:51 GMT
அ.ம.மு.க.வில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது, சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று புகழேந்தி கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சையில் அ.ம.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் பட்டியலில் இருந்து என்னை நீக்கியதாக இதுவரை எனக்கு எந்த தகவலும் வரவில்லை. இது சசிகலா எனக்கு கொடுத்த பதவி. இது யாருக்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதுபற்றி தலைமை தான் முடிவ செய்யும். அ.ம.மு.க. எனது கட்சி. அந்த கட்சியில் தான் தொடர்ந்து நீடிக்கிறேன். என்னை .யாரும் நீக்க முடியாது.

இந்த கட்சியை தொடங்க நானும் ஒரு காரணம். என் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்ப்போம். எந்த கட்டத்திலும் யாரையும் நம்பியில்லை. கொள்கையை மட்டுமே நம்பியுள்ளேன். அ.ம.மு.க. நிர்வாகிகள் கட்சியை விட்டு செல்கிறார்கள். அதற்கு விசாரணை நடத்த வேண்டும் என்று தான் கூறினேன். 

என் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிப்பேன். நான் பா.ஜனதாவுக்கு செல்வதாக கூறுவது தவறான தகவல். சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார். அமைச்சர் ஜெயகுமார் தவிர மற்ற அமைச்சர்கள் யாரும் சசிகலாவை பற்றி தவறாக பேசவில்லை. 

சசிகலா வெளியே வந்தால் கட்சிக்கு நல்ல காலம் பிறக்கும். அப்போது ஆட்சியாளர்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள்.
இந்தி மொழி ஒரே மொழி என்று குரல் எழுப்புகிறார்கள். இதற்கு ஆட்சியாளர்கள், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும். இதில் கட்சி பேதம் பார்க்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News