செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு

Published On 2019-08-31 06:48 GMT   |   Update On 2019-08-31 06:48 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.29,528-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.

கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்து 456-க்கு விற்பனையானது.

ஆனால் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்தது. கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ரூ.3,691 ஆக இருந்தது.

இதனால் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 72 ரூபாய் அதிகரித்தது. ஒரு பவுன் விலை ரூ.29 ஆயிரத்து 528-க்கு விற்பனையானது.

ஆனால் வெள்ளி விலை நேற்று சற்று குறைந்து இருந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 30 காசு குறைந்து ரூ.52 ஆக இருந்தது.

இன்று வெள்ளி விலையில் 40 காசுகள் குறைந்தது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.51.60-க்கு விற்பனையானது.

கடந்த சில தினங்களில் மட்டும் ஒரு பவுன் தங்கம் ரூ.3 ஆயிரம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News