செய்திகள்
அருள்வாக்கு கூறிய கோவில் பூசாரி மீது 75 கிலோ மிளகாய் அரைத்து பக்தர்கள் மிளகாய் அபிஷேகம் செய்தனர்.

கருப்புசாமி கோவிலில் அருள்வாக்கு கூறிய பூசாரிக்கு 75 கிலோ மிளகாய் அரைத்து அபிஷேகம்

Published On 2019-08-01 06:14 GMT   |   Update On 2019-08-01 06:14 GMT
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் கருப்புசாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி அருள்வாக்கு கூறிய பூசாரிக்கு 75 கிலோ மிளகாய் அரைத்து அபிஷேகம் செய்யப்பட்டது.
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் கருப்புசாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கருப்புசாமி கோவிலில் சாமியை வணங்கி அருள் வாக்கு கேட்டனர். மேலும் கருப்புசாமி அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் கோவில் பூசாரி பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தார்.

பின்னர் 75 கிலோ மிளகாய் அரைத்து பக்தர்கள் பூசாரிக்கு மிளகாய் அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியானது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். அதனால் இதனை காண ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் திரண்டனர். பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு கோவிலில் 10 ஆடுகள் வெட்டி சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News