செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்தது

Published On 2019-07-12 07:33 GMT   |   Update On 2019-07-12 07:33 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ஒரு சவரன் ரூ.26,160-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.26 ஆயிரத்து 160 ஆக இருந்தது. நேற்று மாலை அதிரடியாக பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.26 ஆயிரத்து 640-க்கு விற்றது.

இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.256 குறைந்தது. ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 384ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.3298-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரம் ஆகவும், ஒரு கிராம் ரூ.41 ஆகவும் உள்ளது.

Tags:    

Similar News