செய்திகள்
பணத்தை பயணியிடம் ஒப்படைத்த டிரைவர், கண்டக்டர்.

பஸ்சில் தவறவிட்ட பணத்தை பயணியிடம் ஒப்படைத்த டிரைவர் - கண்டக்டர்

Published On 2019-06-14 10:28 GMT   |   Update On 2019-06-14 10:28 GMT
திருப்பூரில் பஸ்சில் தவறவிட்ட பணத்தை பயணியிடம் டிரைவர், கண்டக்டர் ஒப்படைத்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

பஸ்சை திருப்பூரை சேர்ந்த டிரைவர் துரைசாமி என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக செந்தில்குமார் என்பவர் இருந்தார். பஸ் பழைய பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். அப்போது பஸ்சின் முன் இருக்கையில் ஒரு கைப்பை அனாதையாக இருப்பதை 2 பேரும் பார்த்தனர்.

இதில் பணம், ஏ.டி.எம். கார்டு, ஆதார் அட்டை ஆகியவை இருந்தது. பின்னர் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் போலீஸ் நிலையம், டெப்போ ஆகியவற்றுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து கைப்பையை திறந்து பார்த்தனர். அதில் ரூ. 11 ஆயிரத்து 610 ரொக்க பணம், ஏ.டிஎம்.கார்டு, ஆதார் கார்டு, சில ரசீதுகளும் இருந்தது.

மேலும் இந்த தகவல் டிரைவர், கண்டக்டர் புகைப்படம் மற்றும் செல்போன் நம்பருடன் சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது.

இதனை பார்த்த ஒரு பெண் டிரைவர், கண்டக்டருக்கு போன் செய்தார். அப்போது அவர் தான் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த நலா எனவும், அது தன்னுடைய கைப்பை எனவும் தெரிவித்தார்.

உடனடியாக அந்த பெண்ணை திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைப்பையை தவற விட்ட நலாவிடம் ஒப்படைத்தனர்.

டிரைவர், கண்டக்டரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.



Tags:    

Similar News