செய்திகள்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் போலிசான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த பெண் கைது

Published On 2019-06-05 06:35 GMT   |   Update On 2019-06-05 06:35 GMT
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ் மகள் ரமணி(38). இவர், கடந்த 2012ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிராம அலுவலக உதவியாளர் பணியில் சேர்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கல்வி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை கேட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ரமணி, தன்னுடைய கல்விசான்றிதழ் உள்ளிட்டவைகளை சமர்ப்பித்து உள்ளார்.

அதிகாரிகள் அந்த சான்றிதழை ஆய்வு செய்தபோது, அந்த சான்றிதழ் போலி என தெரிய வந்தது. போலி சான்றிதழ் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்த ரமணி மீது கடந்த மாதம் 25ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக (பொது) உதவியாளர் ராமமூர்த்தி கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. பண்டிகங்காதரிடம் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி அந்த வழக்கினை மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு போலீஸ்க்கு மாற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன் பேரில் மாவட்ட குற்ற தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் வழக்குப் பதிவு செய்து போலி சான்றிதழ் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்த ரமணியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

போலி சான்றிதழ் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது, மேலும் இதேபோல் போலி சான்றிதழ் கொடுத்த வேலையில் சேர்ந்து உள்ளனரா? என அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News