செய்திகள்

தேர்தல் கூட்டணி குறித்து 4 நாட்களில் அறிவிப்பு - ஜிகே வாசன் பேட்டி

Published On 2019-03-01 03:11 GMT   |   Update On 2019-03-01 03:11 GMT
தேர்தல் கூட்டணி குறித்து 4 நாட்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவேன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். #ParliamentElection #GKVasan
திருச்சி:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். ஒத்த கருத்துடைய நிலை ஏற்பட்டவுடன் நானே 4 நாட்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவேன்.



தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி குறித்து இதுவரை இறுதி வடிவம் கொடுக்கவில்லை. டாஸ்மாக் கடைகளில் ஆதார் கார்டு குறித்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது நல்ல செய்தி. இளைஞர்களுக்கு அது ஒரு எச்சரிக்கை.

இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #GKVasan
Tags:    

Similar News