செய்திகள்

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2019-02-19 05:33 GMT   |   Update On 2019-02-19 05:33 GMT
திருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 1கிலோ தங்கத்தை கடத்தி வந்த 3 பெண் பயணிகள் உள்பட 4பேர் அதிகாரிகள் சோதனையில் சிக்கினர். #TrichyAirport
திருச்சி:

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார், திருச்சி விமான நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மலேசிய விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த பயணி குத்புதீன் மற்றும் 3 பெண் பயணிகள் ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர்கள் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 4பேரிடமும் இருந்து ரூ.35.20 லட்சம் மதிப்புள்ள 1,100 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கடத்தல் நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குருவிகளாக செயல்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியும் பயணிகள் பலர் தங்கம் கடத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு குருவிகளாக செயல்பட்டு தங்கம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். #TrichyAirport
Tags:    

Similar News