செய்திகள்

அரசு ஊழியர்-ஆசிரியர்களின் குறைகளை முதல்வர் கனிவுடன் கேட்கவேண்டும் - திருமாவளவன்

Published On 2019-02-01 09:10 GMT   |   Update On 2019-02-01 09:10 GMT
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குறைகளை முதல்வர் கனிவுடன் கேட்கவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். #Thirumavalavan
தூத்துக்குடி:

திருச்செந்தூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அச்சுறுத்தலின் மூலமும் ஒடுக்குமுறை மூலமும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை அரசு நசுக்கியிருக்கிறது. அரசு பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது என்கிற சாக்குபோக்கு சொல்லாமல் ஆட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக உள்ள அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் குறைகளை முதல்வர் கனிவுடன் கேட்கவேண்டும். வேலை வாய்ப்பு இன்மையை அரசு திட்டமிட்டு உருவாக்கி வருகிறது.

பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்தே இடைத்தேர்தலை நடத்த தமிழக அரசு விரும்புகிறது. தேர்தல் ஆணையமும் அந்த அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறது. இடைத்தேர்தலை பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

கார்ப்பரேட் நிறுவனங்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு தான் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன அந்த அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் விவகாரம் அணுகப்படுகிறது. இதற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan

Tags:    

Similar News