செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 40 கிலோ கஞ்சா சிக்கியது

Published On 2018-10-14 09:27 GMT   |   Update On 2018-10-14 09:27 GMT
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 40 கிலோ கஞ்சா சிக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ganja

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கேரளாவிலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 1.10 மணிக்கு வந்து சேர்ந்தது.

இந்த ரெயிலின் பொதுப் பிரிவு பெட்டியில் கேட்ப்பாரற்று மூன்று பேக்குகள் கிடந்தன. இந்த ரெயிலில் இரவுப் பணியில் இருந்த தலைமை காவலர் சோதனை மேற் கொண்டபோது மூன்று பைகள் சந்தேகப்படும்படி இருப்பதை பார்த்து அதை கைப்பற்றினார்.

அந்த பைகளில் சோதனை நடத்தியதில் அதில் சிறு சிறு பொட்டலமாக கஞ்சா செடிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம் அதில் 40 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சா மூட்டைகளை சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசார் உடனடியாக அங்குள்ள ரெயில்வே பாதுகாப்புபடை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆலப்புழா ரெயிலில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து கடத்தப்பட்டது? யார் கடத்தினார்கள் என்பது தெரியவில்லை. போலீசை பார்த்ததும் கடத்தல்காரர்கள் பைகளை போட்டு விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று தெரிகிறது. #ganja

Tags:    

Similar News