செய்திகள்

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த ஜப்பான் உதவி- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2018-09-01 09:23 GMT   |   Update On 2018-09-01 09:23 GMT
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த ஜப்பான் உதவி செய்வதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #TNMinister #Vijayabaskar #Egmorechildrenhealthhospital
சென்னை:

ஜப்பான் தூதரகத்தின் முதன்மை செயலாளர் கென்ஜி அயா தலைமையிலான குழுவினர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கே.கே. நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை மற்றும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இக்குழுவில் சர்வதேச பல்கலைகழகத்தைச் சார்ந்த இணைப் பேராசிரியர் மெகுமி கொடைரா, யசுனோரி யவாட்டா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

பின்னர், அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஜப்பான் குழுவினர் பேசுகையில், “அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் தாய்ப்பால் வங்கித் திட்டம் ஒரு புரட்சிகரமான திட்டமாகும். மேலும், தமிழக அரசின் சீரிய திட்டங்களால் அதிக அளவில் ஏழை எளிய மக்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் தரமான சிகிச்சை பெற்றுவருவது பாராட்டுக்குரியது. ஜப்பான் அரசு, தமிழகத்தில் மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எல்லாவிதமான ஒத்துழைப்பையும் நல்கும். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த உதவி செய்வோம்’ என்றனர்.

இதற்கு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தமிழக அரசு ஜப்பான் அரசின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் முதன்மைச்செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #TNMinister #Vijayabaskar #Egmorechildrenhealthhospital
Tags:    

Similar News