செய்திகள்

பா.ம.க. இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகம் - அடையாள அட்டைகளை வழங்கினார் ராமதாஸ்

Published On 2018-08-30 08:13 GMT   |   Update On 2018-08-30 08:13 GMT
சென்னையில் இன்று பா.ம.க. இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் அடையாள அட்டை வழங்கினார். #PMK #Ramadoss

சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி மாநில அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான பொதுக்குழு மற்றும் அறிமுக கூட்டம் சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கில் நடந்தது. பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளைஞர்களிடம் பா.ம.க.வை வலுப்படுத்துவது, அவர்களின் ஆதரவை திரட்டுவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில செயலாளர்கள் தங்கள் பகுதியில் கட்சியின் நிலவரம், எதிர்கால திட்டம் பற்றி பேசினார்கள்.

இதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோர் அடையாள அட்டைகளை வழங்கினர். அவர்களிடம் நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்.

Tags:    

Similar News