செய்திகள்
மாற்றுத்திறனாளி அருள் சகாயராஜ் குடும்பத்தினருக்கு உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி அளித்த போது எடுத்த படம்.

3 சக்கர சைக்கிள் கேட்டு கடிதம்: தஞ்சை மாற்றுத்திறனாளிக்கு உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி

Published On 2018-07-03 10:59 GMT   |   Update On 2018-07-03 10:59 GMT
மூன்று சக்கர சைக்கிள் கேட்டு தனக்கு கடிதம் எழுதிய மாற்றுத்திறனாளிக்கு உதயநிதி ஸ்டாலின் அவரது வீட்டிற்கு நேரில் சென்று ரூ.10 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.
தஞ்சாவூர்:

தஞ்சை டவுன் கரம்பை பகுதியைச் சேர்ந்தவர் அருள் சகாயராஜ் (வயது 47). மாற்றுத்திறனாளியான இவர் அதே பகுதியில் சிறியதாக பெட்டி கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளானார். இதனால் மூன்று சக்கர வாகனம் வாங்க நிதியுதவி செய்யும்படி உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

இதைதொடர்ந்து நேற்று தஞ்சையில் நடந்த திருமண விழாவிற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் தனக்கு பொருளுதவி செய்ய கடிதம் எழுதியிருந்த அருள் சகாய ராஜ் வீட்டிற்கு சென்றார். அங்கு அருள் சகாயராஜை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார். மேலும் அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

மாற்றுத்திறனாளியான நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மேலும் கடைக்கு சென்று வரமுடியாமல் தொடர்ந்து சிரமப்பட்டு வந்தேன்.

இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினால் அவர் உதவி செய்வார் என்று நினைத்தேன். அதன்படி அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் கடிதம் அனுப்பினேன்.

ஆனால் உதயநிதி ஸ்டாலின் எனது வீட்டிற்கே நேரில் வந்து உதவி செய்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் செய்த உதவியால் 3 சக்கர சைக்கிளில் இனிமேல் கடைக்கு செல்ல எளிதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Tags:    

Similar News