செய்திகள்

மணல் கடத்தலுக்கு உதவிய துணை தாசில்தார் சஸ்பெண்டு

Published On 2018-05-05 04:00 GMT   |   Update On 2018-05-05 04:00 GMT
மணல் கடத்தலுக்கு உதவிய துணை தாசில்தார் ராமச்சந்திரனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கலெக்டர் சத்யேந்தர்சிங் உத்தரவிட்டார்.
புதுச்சேரி:

புதுவை மாநிலம் பாகூர் அருகே தென் பெண்ணையாற்றில் மணல் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்ட பாகூர் துணை தாசில்தார் ராமச்சந்திரனுடன் பொதுப் பணித்துறை ஊழியர் பெருமாள் வாக்குவாதம் செய்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இது, கவர்னர் கிரண்பேடியின் கவனத்துக்கும் சென்றது.

இதையடுத்து இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கவர்னர் உத்தரவிட்டார்.

மேலும் இது தொடர்பான வீடியோ ஆதாரங்களுடன் பொதுப்பணித்துறை ஊழியர் பெருமாள் மாவட்ட கலெக்டர் மற்றும் துணை கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் புகார் செய்தார்.

இதன் அடிப்படையில் துணை தாசில்தார் ராமச்சந்திரனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கலெக்டர் சத்யேந்தர்சிங் உத்தரவிட்டார்.

மேலும் துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News