செய்திகள்
கொள்ளை நடந்த திருமண மண்டப அறையில் கேமராவில் பதிவான வாலிபர் படம்.

ஆரணியில் மண்டபத்தில் புகுந்து திருமண விழாவில் 150 பவுன் நகை கொள்ளை

Published On 2018-04-20 05:09 GMT   |   Update On 2018-04-20 05:09 GMT
ஆரணியில் மண்டபத்தில் புகுந்து திருமண விழாவில் 150 பவுன் நகை கொள்ளை நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி:

மேற்கு ஆரணி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அரையாளம் எம்.வேலு மகள் சவுமியாவுக்கும், சென்னை கொளத்தூர் தணிகாசலம் மகன் கார்த்திக் ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஆரணி பைபாஸ் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடந்தது.

முன்னதாக நேற்றிரவு மணமக்கள் அழைப்பு, வாணவேடிக்கை மேளதாளத்துடன் நடந்தது. பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதற்கிடையே மணமகன் கார்த்திக் அக்கா அனுராதா. இவரது கணவர் சண்முகம் சென்னை குரோம்பேட்டையில் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தங்கை சுதா.

இவரது கணவர் அசோக்குமார் சென்னை ஆழ்வார்பேட்டையில் மோட்டார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமண மண்டபத்தில் ஒதுக்கப்பட்ட தனியறையில் தங்கி உள்ளனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து சுதா மற்றும் அவரது சகோதரி அனுராதா உள்ளிட்ட உறவினர்கள் தங்களுக்கு வழங்கிய அறைகளுக்கு திரும்பினர்.

அப்போது அறை திறக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது பேக்கில் வைத்திருந்த அனுராதா, சுதாவின் 150 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தொப்பி அணிந்த நபர் ஒருவர் அறைக்குள் வந்து சென்றது பதிவாகியுள்ளது. அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News