செய்திகள்

வேலூரில் 1000 பெண்களுக்கு மானிய ஸ்கூட்டர்- அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

Published On 2018-03-23 10:35 GMT   |   Update On 2018-03-23 10:35 GMT
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.2½ கோடி மானியத்தில் 1000 பெண்களுக்கு மானிய ஸ்கூட்டரை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
வேலூர்:

வேலைக்கு செல்லும் 1000 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி, வேலூர் கோட்டை கவாத்து மைதானத்தில் இன்று நடந்தது. மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் வரவேற்றார். கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.

அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துக் கொண்டு ரூ.2½ கோடி மானியத்தில் 1000 பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கினார். ஸ்கூட்டர் பழுது நீக்கும் பணிக்காக மாவட்டம் முழுவதும் கிராமம் மற்றும் நகர்புறத்தை சேர்ந்த 120 சுயஉதவிக் குழு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் 23 பேருக்கு முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த 23 பெண்களுக்கும், அமைச்சர் கே.சி.வீரமணி சான்றிதழ் மற்றும் பழுது நீக்கும் உபகரணங்களை ரூ.20 ஆயிரம் மதிப்பில் வழங்கினார்.

மேலும், மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் ஆவின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய கிராமம் மற்றும் நகர்புற பகுதிகளில் 777 வெல்மா அங்காடிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதில், 40 பயனாளிகளுக்கு இந்தியன் வங்கி மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவியாக 32 லட்சம் ரூபாயை அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விஜய், லோகநாதன் எம்.எல்.ஏ., ஆவின் தலைவர் வேலழகன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.கே.அப்பு, ராமு உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.


மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, வனத்துறை சார்பில் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 170 மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடந்தது.

மண்டல வன பாதுகாவலர் டிங்கர்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், திருப்பத்தூர் வன அலுவலர் தேஜஸ்வி, அரசு மருத்துவக் கல்லூரி டீன் சாந்திமலர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துக் கொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதில் கலெக்டர் ராமன், எஸ்.பி. பகலவன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். #Tamilnews
Tags:    

Similar News