செய்திகள்

ஒருவர் மீது ஒருவர் குறை சொல்ல நேரமில்லை - சிறப்புத்தீர்மானம் மீது ஸ்டாலின் பேச்சு

Published On 2018-03-15 10:27 GMT   |   Update On 2018-03-15 10:27 GMT
காவிரி விவகாரம் தொடர்பாக இன்று கூடியுள்ள சிறப்பு சட்டசபை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் எடபாடி பழனிசாமி கொண்டு வந்தார். #TNAssembly
சென்னை:

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று நடந்து வருகிறது. தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டையுடனே கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இதன் மீது எதிர்க்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-

ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லி கொண்டிருப்பதற்கு இது நேரமல்ல. இதுவரை ஒதுக்கப்பட்ட அளவு நீரை எந்த ஆண்டும் கர்நாடகா வழங்கியதில்லை. விவசாயிகள் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அனைத்துக்கட்சித் தலைவர்களை பிரதமர் சந்திக்காதது ஜனநாயகத்தின் நெருக்கடியான தருணம் 

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யத்தயார். மேலும், காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்திட வேண்டும்.
இந்த தீர்மானத்திற்கு திமுக தனது முழு ஆதரவை வழங்கும்.
 #TNAssembly #CauveryManagementBoard #MKStalin
Tags:    

Similar News