செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி - மதுரையில் நீதிபதி ராஜேஸ்வரன் 3-ம் கட்ட விசாரணை

Published On 2018-03-01 10:23 GMT   |   Update On 2018-03-01 10:23 GMT
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடைபெற்ற கலவரம் தொடர்பாக மதுரையில் நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான குழு இன்று 3-ம் கட்ட விசாரணை நடத்தினர்.
மதுரை:

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி கடந்த 2017-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளன்று இளைஞர்களை கலைக்க சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தடியடி நடத்தினர்.

சென்னையில் ஆட்டோக்களுக்கு போலீசாரே தீ வைத்து எரித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. மதுரையில் இன்று 3-ம் கட்ட விசாரணை நடந்தது.

இதில் திருச்சி மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் மயில்வாகனன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நீதிபதி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதே போல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றவர்களும் வாக்குமூலம் அளித்தனர். #tamilnews
Tags:    

Similar News