search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் தடியடி"

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 6-ம் தேதி சென்னை - மும்பை அணிகள் மோதுகிறது.
    • ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    16-வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 6-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் வாங்குவதற்காக நேற்று நள்ளிரவு முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் குவிந்திருந்தனர்.

    கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டது.

    • புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடந்தது.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர்.

    புதுச்சேரி:

    ஐ.பி.எல் நிர்வாகம் பேன் பார்க் ஒன்றை அமைத்து கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க நாடு முழுவதும் 45 நகரங்களில் பிரம்மாண்ட திரைகள் மூலம் போட்டிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தது.

    புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    சென்னை அணி போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மைதானம் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பியது. இதனையடுத்து இரவு 8 மணிக்கு நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டது. இதனால் ரசிகர்கள் அங்கேயே நின்று கூச்சல் போட்டனர்.

    இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×