செய்திகள்

பஸ்கட்டண உயர்வுக்கு பா.ஜனதாவில் ஆதரவும், எதிர்ப்பும்: பொன்.ராதாகிருஷ்ணன்-தமிழிசை கருத்துவேறுபாடு

Published On 2018-01-22 06:58 GMT   |   Update On 2018-01-22 07:24 GMT
பஸ்கட்டண உயர்வு தொடர்பான மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். #BusFareHike

சென்னை:

தமிழகத்தில் பஸ்கட்டண உயர்வுக்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. போராட்டத்திலும் குதித்துள்ளன.

பா.ஜனதாவும் நாளை மறுநாள் (24-ந்தேதி) மாநிலம் தழுவிய அளவில் பஸ்கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

இதுபற்றி மதுரையில் டாக்டர் தமிழிசை கூறியதாவது:-

நிதிப்பற்றாக்குறை காரணமாக பஸ்கட்டணத்தை உயர்த்தியதாக கூறுகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் சம்பளத்தை இருமடங்காக உயர்த்திய போது நிதிப்பற்றாக்குறை தெரியவில்லையா?

போக்குவரத்து கட்டண உயர்வால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 24-ந்தேதி நடைபெறும் போராட்டத்தின் வாயிலாக போக்குவரத்து துறையில் பன்னெடுங்காலமாக உள்ள ஊழல் விவகாரங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும் என்றார்.

பஸ்கட்டண உயர்வுக்கு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நிருபர்களிடம் பேசிய எச்.ராஜா, பஸ்கட்டண உயர்வு அதிகமாக உள்ளது. இது கண்டனத்துக்குரியது. கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

பஸ்கட்டண உயர்வை பா.ஜனதா எதிர்த்தாலும் கட்சிக்குள் ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது. ஓசூரில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

6 ஆண்டுகளுக்கு பிறகு பஸ்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை கட்டணத்தை உயர்த்தியது தவறு அல்ல. ஓட்டு வங்கி அரசியலுக்காக காலம் தாழ்த்தி ஒரேயடியாக கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். #BusFareHike #tamilnews

Tags:    

Similar News