செய்திகள்

கோயம்பேடு-கேளம்பாக்கம் கட்டணம் ரூ. 117: இருமடங்கு உயர்வால் பயணிகள் அதிர்ச்சி

Published On 2018-01-20 09:07 GMT   |   Update On 2018-01-20 09:07 GMT
சென்னை மாநகர சொகுசு ஏ.சி. பேருந்தில் கோயம்பேடு- கேளம்பாக்கத்திற்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.117 உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை:

சென்னையில் மாநகர பஸ் சேவையில் சொகுசு ஏ.சி. வால்வோ பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சுமார் 50 ஏ.சி. பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டன.

ஆனால் பராமரிப்பு செலவு மற்றும் நஷ்டம் காரணமாக ஏ.சி. பஸ் சேவை குறைக்கப்பட்டது. தற்போது கோயம்பேட்டில் இருந்து கேளம்பாக்கத்துக்கு ஒரே ஒரு வழித்தடத்தில் மட்டும் சொகுசு ஏ.சி. வால்கோ பஸ் இயக்கப்படுகிறது.

இதில் ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் அதிகாலையில் சென்று வருகிறார்கள்.

பஸ் கட்டண உயர்வால் கோயம்பேடு - கேளம்பாக்கம் ஏ.சி. பஸ்சில் இருமடங்கு கட்டணம் அதிகரித்து இருக்கிறது. முன்பு இருந்த ஏ.சி. பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 16-ம், அதிகபட்ச கட்டணம் ரூ. 63-ம் இருந்தது.

தற்போது குறைந்தபட்சம் ரூ. 27-ம், அதிகபட்ச கட்டணம் ரூ. 117ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை ஏ.சி. பஸ்சில் ஏறிய பயணிகள் இருமடங்கு கட்டண உயர்வை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இருந்தபோதிலும் அந்த கட்டணத்தை கொடுத்து பயணம் செய்தனர். சிலர் கட்டணத்தை கேட்டு ஏ.சி. பஸ்சில் ஏறாமல் சாதாரண பஸ்சில் சென்றனர். #TamilNews #BusStrike
Tags:    

Similar News