செய்திகள்
விபத்தில் நொறுங்கிய லாரி மற்றும் அய்யப்ப பக்தர்கள் வந்த வேனை படத்தில் காணலாம்.

பெரியகுளம் அருகே வேன்-லாரி மோதல்: டிரைவர் உள்பட 3 பேர் பலி

Published On 2017-11-30 07:40 GMT   |   Update On 2017-11-30 07:40 GMT
பெரியகுளம் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
தேவதானப்பட்டி:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குப்பாண்டியூர் வன்னியர் தெருபகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வேன் மூலம் சென்று கொண்டிருந்தனர். திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டி பைபாஸ் சாலை பால்பண்ணை அருகே வந்த போது காய்கறி ஏற்றிவந்த லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ்(23) மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த குழந்தைகள் உள்பட 30 அய்யப்ப பக்தர்களும் தேனி, மதுரை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

இதில் குமாரசாமி மகன் மணிகண்டன்(12), செந்தில்மகள் சுவாதி(19) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் முருகன், நடேசன், வெங்கடாசலம், சின்னராஜ், சின்னகண்ணன், பழனிச்சாமி, விஜயதர்சினி, சேட்டு உள்பட 28 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு தேனி மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த விபத்தினால் அப்பகுதியில் சிலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Tags:    

Similar News