செய்திகள்
புதுவையில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியபோது எடுத்த படம்.

மத்திய அரசிடம் நிதி பெற தட்டு ஏந்தும் நிலை உள்ளது: நாராயணசாமி வேதனை

Published On 2017-11-25 04:16 GMT   |   Update On 2017-11-25 04:16 GMT
புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி பெற தட்டு ஏந்தும் நிலை உள்ளது என்று மீனவர் மாநாட்டில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

தேசிய மீனவர் பேரவையின் அகில இந்திய மாநாடு கடந்த 2 நாட்களாக புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

மாநாட்டின் நிறைவு விழாவுக்கு மீனவர் பேரவை தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். ராமஜெயம் வரவேற்றார்.

மீனவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லை தாண்டி மீன் பிடிப்பதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும். மீனவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்களுடைய அரசு நிச்சயம் செய்யும்.



புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி பெற தட்டு ஏந்தும் நிலை உள்ளது. நிதி பெற மத்திய அரசிடம் நானும், அமைச்சர்களும் போராடி வருகிறோம்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், திரைப்பட இயக்குனர் அமீர் மற்றும் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாநாட்டில் தமிழகம், புதுவை, குஜராத், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒரிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


Tags:    

Similar News