செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில் அத்துமீறல் இல்லை: வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

Published On 2017-11-19 12:51 GMT   |   Update On 2017-11-19 12:51 GMT
அ.தி.மு.க. ஆட்சியில் அத்துமீறல் எதுவும் நடக்க வில்லை என்று வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் வருகிற 29-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அரசு சார்பில் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

விழாவையொட்டி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று நடந்தது. தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, ஓட்டப்பந்தயம் உள்பட 11 போட்டிகள் நடந்தது.

இதில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தினகரன் கூறியுள்ளார். அதற்கு அவசியம் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது. தேவைபடும் நேரத்தில் அவருக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிருபித்து காட்டுவோம். அ.தி.மு.க. ஆட்சியில் அத்துமீறல் எதுவும் நடக்க வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அண்ணாதுரை, எம்.பி.க்கள் பரசுராமன், பாரதிமோகன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், திட்ட அலுவலர் மந்திராச்சலம், கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, தாசில்தார் தங்க பிரபாகரன், பால்வளத் தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மணீவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், பகுதி செயலாளர்கள் அறிவுடை நம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News