செய்திகள்

வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-11-09 12:41 GMT   |   Update On 2017-11-09 12:42 GMT
லெட்டர் பேட் கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்டப்படிப்பை விலைக்கு வாங்கிவிடுவதாகவும், வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

லெட்டர் பேட் கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்டப்படிப்பை விலைக்கு வாங்கிவிடுவதாகவும், வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர்களின் தகுதி தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி கிருபாகரன் அமர்வின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு விபரங்கள் பின்வருமாறு:-

தமிழக வழக்கறிஞர்களின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். லெட்டர் பேடு கல்லூரிகளில் காசு கொடுத்து சட்டப்படிப்பை விலைக்கு வாங்கிகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கும் இத்தகைய கல்லூரிகள் மீது பார் கவுன்சில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுத்த பின்னரே பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News