செய்திகள்

வைகை அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Published On 2017-11-06 09:23 GMT   |   Update On 2017-11-06 09:23 GMT
மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
கூடலூர்:

வடகிழக்கு பருவமழை தொடங்கி கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தாலும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட சில மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை.

எனவே விவசாயிகள் மழை பெய்ய வேண்டும் என ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். தற்போது முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1493 அடியாக உள்ளது. அணையில் இருந்து 1258 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு அணையின் நீர் மட்டம் 122.80 அடியாக உள்ளது.

வைகை அணை நீர்பிப்பு பகுதியிலும் மழை பெய்துள்ளதால் அணைக்கு 1451 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 56.76 அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக கடந்த 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைத்துள்ளது.

எனவே வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று 710 கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 43.30 அடியாக உள்ளது. 41 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 119.88 அடியாக உள்ளது. 27 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
 
பெரியாறு 4, தேக்கடி 6.2, கூடலூர் 6, சண்முகாநதி அணை 12, உத்தமபாளையம் 8.6, வீரபாண்டி 22, வைகை அணை 24.6, மஞ்சளாறு 20, மருதாநதி 17.2, சோத்துப்பாறை 6, கொடைக்கானல் 10 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News