செய்திகள்

டெங்கு கொசு உற்பத்தி: 3 தியேட்டர்கள் உள்பட 7 இடங்களில் ரூ.2 லட்சம் அபராதம்

Published On 2017-10-24 05:24 GMT   |   Update On 2017-10-24 05:24 GMT
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த 3 தியேட்டர்கள் உள்பட 7 இடங்களில் ஆய்வு செய்து ரூ.2.06 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கும்பகோணம்:

கும்பகோணம் பகுதியில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி குறித்து நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி தலைமையில் நகர்நல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர்கள் டேவிட்பாஸ்கரராஜ், சுவாமிநாதன், பிரின்ஸ் சகாயராஜ் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது கும்பகோணம் பாணாதுறையில் உள்ள ஒரு மாட்டு கொட்டகையில் ஆய்வு செய்தபோது டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாடு வளர்க்கும் உரிமையாளர்களான கமலா, மூர்த்தி ஆகியோருக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து அதேபகுதியில் தட்டச்சு நிலையத்தை பார்வையிட்டு சுகாதாரமின்றி இருந்ததால் ரூ.1,000 அபராதம் விதித்தார்.

பின்னர் கும்பகோணம் லட்சுமி விலாஸ் தெருவில் குளிர்பானங்கள் தயாரிக்கும்  நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது நிறுவனவளாகத்தின் பின்புறம் இருந்த டயர் மற்றும் தொட்டியில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்தது. இதனால் குளிர்பான நிறுவன உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட் டது. பின்னர் அதேபகுதியில் உள்ள ஒரு திரையரங்கத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது திரையரங்கம் சுத்தம் இல்லாமல் கொசுப்புழுக்கள் உருவாகும் நிலை இருந்ததால் அதன் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


இதேபோல் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகியிருந்த கும்பகோணம் பெசன்ட் ரோட்டில் உள்ள (விஜயலட்சுமி) திரையரங்கத்துக்கு ரூ.20,000, நகர மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள மற்றொரு திரையரங்கத்துக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 7 இடங்களில் ஆய்வு செய்து ரூ.2.06 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News