search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு கொசு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது.
    • உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது.

    உலகிலேயே முதன்முறையாக, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏ.டி.எஸ். கொசுக்களால் பரவும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சமீபகாலமாக பிரேசில் நாட்டில் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தொடர் காய்ச்சல். ஏற்பட்டதால், அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இதனையடுத்து, மக்களை காக்க பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது. இதனால், உலக அளவில் அதிகமான டெங்கு தடுப்பூசி போடப்பட்ட நாடாக பிரேசில் கருதப்படுகிறது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் ( WHO)தெரிவித்துள்ளது.

    • ஜலதோசம், காய்ச்சல் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்
    • அதிகாரி உத்தரவு

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் விட்டு, விட்டு மழை பெய்து வருகின்றது.

    இதனால் ஜலதோசம், காய்ச்சல் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு மற்றும் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகின்றது.

    அதன்படி பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி உத்தரவின்பேரில் தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்து வருகின்றனர்.

    • வீடு, வீடாக சென்று தண்ணீரில் குளோரின் ஊற்றினர்
    • தண்ணீர் தேங்கிய இடத்தில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், திமிரிஅடுத்த பட்டணம் ஊராட்சியில் சுகாதாரத்துறைசார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    திமிரி சுகாதார மேற்பார்வையாளர்கள் பழனி, மணி, சுகாதார ஆய்வாளர் கவின் ஆகியோர் தலைமையிலான தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தெருக்களில் கொசு மருந்து அடித்தல், வீடு, வீடாக சென்று தண்ணீரில் குளோரின் தெளித்தல், சாலைகளில் தண்ணீர் தேங்கிய இடத்தில் பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார அறிவுறுத்தினார்.
    • 85 ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் சுமார் 2,322 பழைய டயர்கள் அகற்றப்பட்டது.

    கள்ளக்குறிச்சி, ஜூலை.5-

    தமிழகத்தில் பருவ மழை தொடங்க உள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு, கொசுப்புழு உற்பத்தி ஆகாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார அறிவுறுத்தினார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் பழைய டயர்களை கண்டறிந்து அகற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் சுகாதாரத்துறையுடன், கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் இணைந்து 85 ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் சுமார் 2,322 பழைய டயர்கள் அகற்றப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலக்டர் கூறியதாவது:-

    பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறத்திலும் மழைநீர் தேங்காவண்ணம், தொட்டிகள், உடைந்த மண்பாண்டங்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உரல்கள் போன்றவற்றை அகற்றியும், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து, டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து முன்னெ ச்சரி க்கை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்கள் காய்ச்சல் என்றால் தாமாகவே கடைகளில் விற்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் தேவையான ரத்த பரிசோதனைகளை செய்து கொண்டு, காய்ச்சலுக்கான முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • டெங்கு கொசுவை உருவாக்கக்கூடிய தண்ணீர் தேங்க கூடிய பொருள்களை அப்புறப்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • நல்ல தண்ணீரை உடனுக்குடன் பிடித்து அதை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

    பேராவூரணி:

    தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிக்கும் பணி தீவிரமாக நட பெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி குழுவினர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி. சௌந்தரராஜன் தலைமையில் ஒவ்வொரு வீடாகச் சென்று டெங்கு கொசுவை உருவாக்கக்கூடிய தண்ணீர் தேங்க கூடிய பொருள்களை அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தரராஜன் கூறியதாவது, பகலில் தான் டெங்கு கொசு கடிக்கும். நல்ல தண்ணீரில் தான் டெங்கு கொசு உருவாகிறது. எனவே மூன்று நாட்களுக்கு மேல் நல்ல தண்ணீரை பிடித்து வைத்திருப்பதால் டெங்கு கொசு உருவாகிறது. நல்ல தண்ணீரை உடனுக்குடன் பிடித்து அதை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

    காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும் எனவும், தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள், உரித்து மட்டைகளை தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார். சுகாதார மேற்பார்வையாளர் தவமணி, சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

    ×