செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் டெங்குவுக்கு அதிக பள்ளி குழந்தைகள் பாதிப்பு

Published On 2017-10-11 05:12 GMT   |   Update On 2017-10-11 05:12 GMT
திருச்சி மாவட்டத்தில் டெங்குவுக்கு நேற்று ஒருவர் பலியான நிலையில், அதிக பள்ளி குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
திருச்சி:

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள மாராடி கிராமத்தில் நேற்று காலை டெங்கு காய்ச்சல் பாதித்த பால் வியாபாரியின் மனைவி புவனேஸ்வரி என்பவர் இறந்தார்.

அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழ்ச்செல்வன் (16), மகள் பூர்ணிமா (14), ராம்குமார் மகள் அனுஷியா (9), ராஜா மகன் கோபிநாத் (7), சுப்ரமணியன் மகள் குமுதினி 20), குமார் மகள் தீபிகா (15) ஆகியோர் கடும் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பி.மேட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பி.மேட்டூர், விஸ்வாம்பாள் சமுத்திரம் வடக்கு ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த 12 பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 22 பேர் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News