செய்திகள்

குடகு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள்

Published On 2017-09-30 04:39 GMT   |   Update On 2017-09-30 04:39 GMT
கடந்த 2 மாதங்களாக புதுச்சேரி மற்றும் குடகுமலை சொகுசு விடுதிகளில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள்.
சேலம்:

தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கர்நாடக மாநிலம் குடகு மலையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி இருந்தனர்.

இவர்களில் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகம் திரும்பிவிட்டனர். வெற்றிவேல் புதுச்சேரி மற்றும் குடகுமலை விடுதிக்கு செல்லாமல் சென்னையிலேயே தங்கி இருந்தார்.

தங்கதமிழ் செல்வன் உள்ளிட்ட 15 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகம் திரும்பிவிட்டனர்.

இவர்கள் அனைவரும் சென்னையில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரனை சந்தித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்.

கடந்த 2 மாதங்களாக புதுச்சேரி மற்றும் குடகுமலை சொகுசு விடுதிகளில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள் சொந்த ஊரு திரும்பியதால் அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



Tags:    

Similar News