செய்திகள்

சென்னையில் கமல்ஹாசன் - அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

Published On 2017-09-21 09:48 GMT   |   Update On 2017-09-21 09:48 GMT
சென்னையில் நடிகர் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்.

சென்னை:

தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார்.

இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று தமிழகம் வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை, நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் நேரில் சென்று வரவேற்றார். பின்னர் அனைவரும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அங்கு கமல்ஹாசனை கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Tags:    

Similar News