செய்திகள்
முருகன்

வேலூர் ஜெயிலில் முருகனுக்கு மனநல டாக்டர்கள் கவுன்சிலிங்

Published On 2017-08-22 06:19 GMT   |   Update On 2017-08-22 06:19 GMT
வேலூர் ஜெயிலில் 5-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் முருகனுக்கு நேற்றிரவு மனநல டாக்டர்கள் கவுசிலிங் அளித்து, பல்வேறு அறிவுரைகள் கூறினர்.
வேலூர்:

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை கைதி முருகன் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் விடுதலை கிடைக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த அவர் ஜீவசமாதி அடைய உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

தொடர்ந்து இன்று 5-வது நாளாக தனது உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். டாக்டர்கள் அவரது உடல் நிலையை பரிசோதித்தனர். மேலும் நேற்று காலை மவுன விரதத்தையும் தொடங்கினார்.

அவரது உடல்நிலை குறித்து ஜெயில் டாக்டர் மற்றும் மருத்துவ குழுவினர் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர்.

நேற்றிரவு மனநல டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு முருகனுக்கு கவுசிலிங் அளிக்கப்பட்டது. டாக்டர்கள் முருகனுக்கு பல்வேறு அறிவுரைகள் கூறினர். ஆனால் முருகன் தனது முடிவில் மாற்றமில்லை என்பதில் பிடிவாதமாக உள்ளார். தொடர்ந்து அவர் வடக்கு திசை நோக்கி தியான நிலையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

முருகன் 5-வது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதால் அவருக்கு சிறையில் கைதிகள் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜெயில் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

அதன்படி, முருகனை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சந்தித்து பேச முடியாது. வாரம் ஒருமுறை ஜெயிலில் உள்ள போனில் உறவினர்களிடம் பேசும் சலுகை உள்பட அனைத்து சலுகைகளையும் இழந்துள்ளார்.



Tags:    

Similar News