செய்திகள்

ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-08-16 09:33 GMT   |   Update On 2017-08-16 09:33 GMT
கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத்தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரை ஐகோர்ட்டில் கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நான் கக்கூஸ் ஆவணப்படத்தில் இயக்குநராக பணியாற்றி உள்ளேன். அந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்ட சில சமூகங்களை தாக்கும் வகையில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது என மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த வழக்கு காவல் துறையால் வேண்டுமென்றே என் மீது போடப்பட்ட வழக்கு. ஆகவே வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு திவ்ய பாரதி மீதான வழக்கினை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. மேலும் ஒத்தக்கடை போலீசார் இது குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி மனு மீதான விசாரனையை ஒத்தி வைத்தனர்.
Tags:    

Similar News