செய்திகள்

உடுமலையில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலி

Published On 2017-07-23 11:16 GMT   |   Update On 2017-07-23 11:16 GMT
உடுமலையில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் அருகே உள்ளது சோழமாதேவி. இந்த பகுதியை சேர்ந்தவர் முகமது. இவரது மகன் முகமது இத்ரியாஸ் (வயது 18). இவர் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

முகமது இத்ரியாசுக்குகடந்த சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து கோவை உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.

இதையடுத்து முகமது இத்ரியாசை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 20-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது இத்ரியாஸ் நேற்று பரிதாபமாக இறந்தார். டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் முகமது இத்ரியாஸ் பலியான சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து சோழமாதேவி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார துறை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News