செய்திகள்

கச்சிராயப்பாளையம் அருகே வாய்க்காலில் குளித்த 6-ம் வகுப்பு மாணவன் சேற்றில் சிக்கி பலி

Published On 2017-06-24 16:31 GMT   |   Update On 2017-06-24 16:31 GMT
கக்சிராயப்பாளையம் அருகே குளிக்க சென்ற மாணவன் சேற்றில் சிக்கி இறந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கச்சிராயப்பாளையம்:

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கல்வராயன் மலை அடிவாரத்தில் மலைவாழ் உண்டுஉறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் கிணத்தூர் பகுதியை சேர்ந்த சவுந்தராஜன் மகன் அரவிந்த், தங்கவேலு மகன் சூர்யா ஆகியோர் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இன்று காலை மாணவர்கள் 2 பேரும் பள்ளி அருகே உள்ள கோமுகி அணை வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர். அவர்கள் வாய்க்காலின் கரையில் நின்று குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அங்குள்ள சேற்றில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

சிறிது நேரத்தில் அரவிந்த் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி பலியானான். சேற்றில் சிக்கிய சூர்யா கூச்சல் போட்டான். அவனது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் சூர்யாவை மீட்டனர்.

மயங்கிய நிலையில் இருந்த அவனை 108 ஆம்புலன்சு மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளிக்க சென்ற மாணவன் சேற்றில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News