செய்திகள்
ராபர்ட்பயாஸ்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ராபர்ட்பயாஸ் கருணை கொலை செய்யக்கோரி மனு

Published On 2017-06-22 04:23 GMT   |   Update On 2017-06-22 04:23 GMT
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள ராபர்ட்பயாஸ், தன்னை கருணை கொலை செய்யக்கோரி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மனு அனுப்பி உள்ளார்.
செங்குன்றம்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான ராபர்ட்பயாஸ், ஜெயகுமார் ஆகிய இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். ரவிச்சந்திரன் மதுரை சிறையிலும், நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் ராபர்ட்பயாஸ், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில் அவர், “கடந்த 26 ஆண்டுகள் சிறையிலேயே காலம் கடத்தி விட்டேன். ஆயுள் தண்டனையை விட அதிகமான நாட்கள் சிறையில் இருந்து விட்டேன். எங்களை விடுதலை செய்யுமாறு அனுப்பிய கருணை மனு மீது மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறையில் இருந்து விடுதலை ஆகாததால் குடும்பத்தினருடன் வாழ முடியாமல் தவிக்கிறேன். இதனால் என்னை கருணை கொலை செய்து, என்னுடைய உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.
Tags:    

Similar News